Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, May 09, 2018

அதிரவைக்கும் காலா பாடல்கள் இணையத்தில் வெளியீடு (பாடல்கள் உள்ளே)) !!

Currently online
காலா திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் இரஞ்சித் இயக்கியுள்ள படம் 'காலா'. இதை தனுஷ் தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 7-ம் திகதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலா படத்தின் பாடல்களை நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் இன்று (புதன்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகியுள்ள 9 பாடல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

இதில், ரஜினிக்கு நெருக்கமான முக்கிய திரையுலகினர் கலந்துகொள்கிறார்கள். அதோடு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மொத்தம் 8,500 பேருக்கு இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.