Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, May 04, 2018

தக்காளி ஆம்லட் செய்வது எப்படி ??

Currently online
தேவையான பொருட்கள் 
கடலை மா - 100 கிராம்
மைதா - 50 கிராம்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
ரவை - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
வெங்காயம் - பாதி
இஞ்சி - கால் அங்குல துண்டு
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ஸ்பினாச் - ஒரு கைப்பிடி

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் கடலை மா, மைதா, மிளகாய்த் தூள், பேக்கிங் சோடா, ரவை, பெருங்காயம் , உப்பு ஆகியவற்றைப் போட்டு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, ஸ்பினாச் சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றை அனைத்தையும் மாவில் போட்டு கலந்து விடவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை தோசையாக வார்க்கவும். மேலே சிறிது எண்ணெய் விட்டு இரண்டும் பக்கமும் பதமாக வெந்ததும் எடுக்கவும்.

சுவையான தக்காளி ஆம்லட் தயார்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.