Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, May 04, 2018

இலங்கையில் வயது முதிர்ந்தவர்களுக்கு காத்திருக்கும் அபாயமான நோய்!!

Currently online
இலங்கையில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், வயது முதிர்ந்தவர்கள் எதிர்க்கொள்ளும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலையின், வாதநோயியலுக்கும் புனருத்தாபனத்துக்குமான பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாத நோய்களின் தாக்கம் இருக்கும் என வாதநோயியலுக்கும் புனருத்தாபனத்துக்குமான பிரிவின் வைத்தியர், கலீல் கஸிம் தெரிவித்துள்ளார். நாட்டில்  10 சதவீதத்துக்கும் அதிகமானோர் வயது முதிர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இந்த தொகை 2030 ஆம் ஆண்டில், 22 சதவீதமாக அதிகரிக்கும். ஆகவே 2030 ஆண்டில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வயது முதிர்ந்தவர்கள், வாத நோய்களால் பாதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.