Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 29, 2018

பிரதமர் சென்ற ஹோட்டலின் வெளிப்புறத்தில் கல்வீச்சு தாக்குதல் !!

Currently online
யாழ். நகரில் உள்ள யூஎஸ் ஹோட்டலில் இரவு விருந்துக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்த வேளை அந்த ஹோட்டலின் வெளிப்புறத்தில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு யூஎஸ் ஹோட்டலில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இரவு விருந்துக்கு சென்றிருந்தார்.

இதேவேளை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைக்கு அதிகளவில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இரவு 9.45 மணியளவில் யாழ் நகரத்தில் மின் தடை ஏற்பட்டது. அந்தவேளை யூஎஸ் ஹோட்டலுக்கு வெளிப்புறத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

கல் வீச்சை மேற்கொண்டோர் தப்பி ஓடிவிட்டனர். எனினும் ஹோட்டல் மீது எந்த கல்வீச்சுத் தாக்குதலும் இடம்பெறவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.