Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 29, 2018

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மழைநீர் தேக்கத்தால் எலி காய்ச்சல் அபாயம்!!!!!!!!!!!

Currently online
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புக்களால்  எலி காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உண்டு. இவற்றால்  நீருடனான அனர்த்த பகுதிகளில் நடமாடும் போது பாதணிகளை அணிந்துக் கொள்ளவேண்டும் என்று சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெள்ள நீர் வழிந்தோடிய பின்னர், அப்பகுதிகளை நன்றாகத் தூய்மைப்படுத்திய பின் வீடுகளுக்குச் செல்லுமாறும்  அறிவித்துள்ள சுகாதாரப் பரிசோதகர்கள் பிரதேசங்களை அண்மித்துள்ள சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன், வீடுகளை சுத்தப்படுத்திக்கொள்வதற்காக,  011-2635675 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றனர். 

குறித்த நீர்த் தாங்கிகளையும் சுத்தம் செய்யுமாறும் கொதித்தாரிய நீரை மாத்திரம் அருந்துமாறும் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவுருத்தியுள்ளது.    
  
இதேவேளை, வெள்ளத்திற்குட்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.