Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, May 18, 2018

முள்ளிவாய்க்கால் பகுதியில் குளிர்பானம் வழங்கும் படையினர் ; மக்கள் விசனம்!

Currently online
இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை  இராணுவத்தினர் குளிர்பானங்கள் மக்களுக்கு வழங்கிவருவதை காணமுடிகின்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அண்மையில் வீதியோரமாக கொட்டகை அமைத்துள்ள படையினர், அவ்வழியால் வரும் மக்களை இடைமறித்து குளிர்பானங்கள் வழங்கிவருகின்றனர்.

இந்த நிலையில் குளிர்பானம் வழங்குவது தொடர்பில் எதற்காக இன்று இவ்வாறு செய்கிறீர்கள்? யுத்த வெற்றியை இன்றைய தினம் இங்கு கொண்டாடுகிறீர்களா? என சம்மந்தப்பட்ட படையினரிடம் கேட்டிருந்த நிலையில் அவர்கள் தெரிவித்ததாவது ;

''இன்றைய தினம் முல்லைத்தீவில் துக்கதினம் கடைப்பிடிக்கப்படுவதால் கடைகள் அனைத்தும் பூட்டியுள்ள நிலையில் நினைவேந்தலை கடைப்பிடிக்கும் மக்களுக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம் என தெரிவித்துள்ளனர்.


அத்துடன்  லுரித்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக பல்வேறு இடங்களிலிருந்தும் வந்துள்ள மக்களுக்கு செய்கின்ற சிறிய உதவியாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றோம் எனவும், இதனை ஒரு யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வாக ஒருபோதும் ஏற்பாடு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

நாம் விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே எதிரானவர்களேயென்றி மக்களுக்கு எதிராளிகள் இல்லை. இறந்துபோன மக்களின் உணர்வினை மதித்து இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்'' என விளக்கம் கொடுத்துள்ளனர்.

மேலும், இதனை ஒரு யுத்த வெற்றிக் கொண்டாட்டம் இல்லை என படையினர் தெரிவித்துள்ள  போதிலும் இதில் ஏதாவது உள் நோக்கம் இருக்கலாம் என அங்கிருப்பவர்கள் விசனம் வெளியிட்டுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.