Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, May 05, 2018

வவுனியா சிறைக்குள் கைதிகளுக்கு நடக்கும் அநீதி!

Currently online
வவுனியா சிறைச்சாலையில்  நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும்  இணைந்து ஏனைய கைதிகளுக்கு புரியும் அநீதிகள் தொடர்பாக விளக்கமறியல் கைதி ஒருவர்  பதில் நீதவானிடம்  முறையிட்டுள்ளார். 

வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் இருந்து வவுனியா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட விளக்கமறியல் கைதி வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு பல்வேறான அநீதிகள் இடம்பெறுவதாகவும்  சிறைச்சாலைக்குள் புகையிலை போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாகவும் கைதிகள் நல்ல இடத்தில் உறங்குவதற்கு சுமார் மூவாயிரம் ரூபாய் வரை பெறப்படுவதாகவும் அப்பணம் வழங்கப்படா விட்டால் மலசல கூட பகுதியிலேயே தங்க விடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான விடயங்களில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும், நீண்ட நாள் கைதிகளாக இருப்பவர்களும் இணைந்தே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து சட்டத்தரணிகளும் குறித்த கைதி சுட்டிக்காட்டும் பிரச்சனை சிறைச்சாலையில் இடம்பெறுவதாக தெரிவித்ததை அடுத்து பதில் நீதவான் வவுனியா சிறைச்சாலை பொறுப்பதிகாரியை நீதிமன்றத்துக்கு அழைத்து குறித்த கைதி தெரிவித்த கருத்தினை சுட்டிக்காட்டி இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.