Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, May 17, 2018

தவறிய அழைப்பு..........!!!!!! த.யசுதன்

Currently online
இமையோடு இமை மோதும் 
இதமான இரவு..
வெட்கித்தபடி மேக ஆடையில் மறையும் வெண்ணிலவு...
உறங்கும் பறவைகளின் உறங்காத
ஓசை...

அப்போதுதான் அது நிகழ்ந்தது...

கட்டிலோடு சேர்த்து ஆறு கால்கள்
அசையாதபடி....படுக்கையில் நான்
கதவு தட்டாமல் என் 
காது தட்டியது தொலைபேசி ஓசை

அவசர அழைப்பென்று அழுத்தி விட்டேன்..
அதுவே காதல் அழைப்பானது..
ஆமாம் பெற்றவளுக்கு அடுத்தடியாய் கேட்ட முதல்
பெண்குரல்...
அக்குரல் கேட்டவுடன்
மலட்டு உள்பெட்டி கருக்கட்டியது
காதலை...

பேசி பேசி தொலைபேசியில்
தொலைந்தோம்....
மணம் முடிக்க முன் மானம்
இழந்தோம்...
மீள் நிரப்பிய அளவிற்கு
வயிற்றை நிறைக்கவில்லை...
முழுநாளும் காதலுக்கு முன்னுரைதான் எழுதினோம்...

சில நாள் செல்ல..
செல்பேசி தூங்கியது...
இயந்திரக்காதல் இடையிலே
நின்றது...
தவறி வந்ததால் தவறியே சென்றது

எண்ணை மாற்றி விட்டாள்...
என்னை ஏமாற்றி விட்டாள்...

  நன்றி 
த.யசுதன் 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.