Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, May 07, 2018

பெண்ணினமே எம்மை மன்னித்துவிடு........!!! த. யசுதன்

Currently online
ஆடவரில் ஒருவன் அழைக்கிறேன்
பெண்களே வருக..
நீங்கள் அழிக்க எண்ணும் 
ஆணாக மாறிவிட்டேன்
அழித்துவிட்டுச் செல்லுங்கள்..

உண்மைப்பார்வை மறைத்து
ஊனப்பார்வை பார்த்த என்
ஊனக்கண்ணில் உதிரம் வரும்வரை உம் சந்தன விரல்களால்
கீறி விடுங்கள்..

காதல் என்று கூறி கதறவைத்து
வாழ்க்கை பறித்த என்னை
வாள் வார்த்தை கொண்டு
வெட்டி வீசுங்கள்..

ஆண்மைப்பசி அதிகரிக்க
சிசுக்களையும் கசக்கி நசுக்கிய
என் அடையாள அங்கத்தை
பாதத்தால் மிதித்துச் செல்லுங்கள்..

மறுபிறவியில் உங்கள் 
மகனாகப் பிறக்கிறேன்.
தாய்ப்பாலுக்குப் பதிலாக
விசப்பால் கொடுத்துக் கொன்றிடுங்கள்..

மன்னித்துச் செல்லுங்கள் இல்லையேல்
மரணிக்கச் செய்யுங்கள்...

 நன்றி 
த. யசுதன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.