Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 08, 2018

வதம் கொண்ட மாதம்............!!! கவிப்புயல் சரண்

Currently online
கடியதோர் கல்லும் முள்ளும்
கொடு விட அரவக்காடும்
நீர்சுனை ஆழிக்கரையும்
நிமிர்ந்திட முடியா குண்டால்
நீந்தியே நிலம் உருண்டோம்

எரிதணல் மேலும் நின்று
எறிகணை யாவும் கொண்டு
சுடுகுழல் சூழ நின்று
சுந்தர வன்னி மண்ணில்
கூடி நம் பகை எதிர்த்தோம்

அடிமைகள் வாழ்வு நீங்க
அமைதியாய் வம்சம் வாழ
எம் குடியது முழுகிடினும்
தேடி எம் பகை அழித்தோம்

காரிருள் சூழ்ந்ததன்று
கரும் புகை மேலெழுந்து
காற்றுடன் கலந்து போக
எங்கள் ஆட்டமும் அடங்கியது
அடிமை அத்தியாயம் தொடங்கியது....

          நன்றி
கவிப்புயல் சரண்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.