Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, May 07, 2018

துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக குழு உறுப்பினர் உயிரிழப்பு !!

Currently online
பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான திலீப என்று அழைக்கப்படும் திலீப் ரோஹன ரோட்ரிகோ என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் கண்டி, மைலாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. 

வத்தளை பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் டி. மஞ்சுவின் மரணத்திற்குப் பின்னர் திலீப் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  சந்தேகநபரை  மைலாபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்ய முயற்சித்தபோது, ​​துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த  திலீப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.