Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, May 03, 2018

நீதிபதி இளஞ்செழியனுக்கு இடமாற்றமா ??

Currently online
மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நீதிபதியாக திகழும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இடம் மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன.

இந்த விடயம் யாழ் குடா நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்று நீதிபதி இளஞ்செழியனிடம் இடமாற்றம் குறித்து எழுப்பிய கேள்விக்கு இடமாற்றம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. எனினும் இதுவரையில் அவ்வாறான தகவல் எதுவும் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை எனவும் நான் அரசாங்க ஊழியர் என்பதனால் எந்த இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டாலும், எங்கும் செல்லத் தயார். யாழ்ப்பாணத்தில் சேவை செய்த காலப்பகுதி என் வாழ் நாளில் மறக்கவே முடியாத காலம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நீதிபதி இளஞ்செழியன் இன்னும் சில காலம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அவரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனை இரத்து செய்ய மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாக யாழ்ப்பாண பொது மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.