Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 08, 2018

சுவையான‌ நண்டு குருமா செய்வது எப்படி ??

Currently online
தேவையான பொருட்கள் 
நண்டு - 6
நாட்டு வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 3
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய்ப் பால் - 2 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
டால்டா - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - 4
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை 

நண்டை ஓடு நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் டால்டாவை போட்டு உருகியதும் அதில் பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதில் மிளகாய்த் தூள் போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்.

வதக்கியவற்றுடன் சுத்தம் செய்து நறுக்கிய நண்டு துண்டுகளைப் போட்டு கிளறவும்.

நண்டு நன்கு மசாலாவுடன் ஒன்று சேர்ந்ததும் அதில் தேங்காய்ப்பால் சேர்த்து பிரட்டி விடவும்.

அதன் பிறகு உப்பு மற்றும் அனைத்து வகையான மசாலாப் பொடிகளையும் சேர்த்து கிளறி மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

நண்டு வெந்து, குருமா திரண்டு வந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான‌ நண்டு குருமா தயார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.