Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, May 03, 2018

அன்பிற்கு ஏங்கும் உயிர்கள்...........!!!!! பாரதி மைந்தன்

Currently online
உலகம் எனும் மேடையிலே
தினம் நாடக் காட்சியையா
நாகரீக மோகம் தனில்
வாழ்வை உணராமல் தவிக்கின்றோம்

அன்பென்ற பெயரில்
காதல் நாடகம் இன்று
நாளை காமத்தின் ஆசையிலே
உங்களையே மறந்து
இழக்கிறாய் கற்புதனை

அதனால் விளைந்த பிள்ளை
இன்று வீதியிலே
யாரும் இல்லா உறவாக
அன்பிற்கு அன்பிற்கு ஏங்கும் உயிர்களாய்
வாழுதையா சமூகத்திலே

அன்பிற்கு விலை பேசி
நீ கொண்ட ஊடல்
இன்று அன்பிற்காய் ஏங்க வைத்து
மகிழ்வுடனே போகுதையா
உங்களின் அழகான வாழ்க்கை

அனாதை மடம் தனிலே
யாரும் அற்ற உறவாக
தவிக்கும் உள்ளங்கள் நாங்கள்
யார் அறிவார் எம் நிலை
ஏங்கும் உணர்வுகளை உணருமா சமூகமே

       நன்றி
பாரதி மைந்தன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.