Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, May 10, 2018

கூகுள் அசிஸ்டென்ட் செயலியில் புதிய வசதி !!

Currently online
நமக்காக செல்போனில் பேசும் புதிய வசதி கொண்ட கூகுள் அசிஸ்டென்ட் செயலியை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இணையதள உலகில் முன்னணி தேடுபொறியாக விளங்கும் கூகுள் நிறுவனம், ‘கூகுள் அசிஸ்டென்ட்’ என்ற பெயரில் செல்போன் செயலியை உருவாக்கி உள்ளது. 

ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யப்படும் இந்த செயலியானது, அதை பயன்படுத்துவோர் பிறப்பிக்கும் குறிப்பிட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது. போன் செய்தல், இ-மெயில் தேடுதல், குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கிறது. 

இந்த செயலியில் மேலும் சில வசதிகளை கூகுள் நிறுவனம் புகுத்தி உள்ளது. அதாவது இந்த செயலியை பயன்படுத்துவோருக்கு, அவர்கள் சார்பில் செல்போனில் பேசி பல பணிகளை இந்த செயலி மேற்கொள்ளும்.

குறிப்பாக விடுதிகளில் உணவுக்கு பதிவு செய்தல், சலூன்களில் முடிவெட்டுவதற்கு நேரம் பெற்றுத்தருதல் (அப்பாயின்ட்மென்ட்) போன்ற காரியங்களை இந்த செயலியே போனில் பேசி முடித்து விடுகிறது. இதற்கான உத்தரவை மட்டும் நாம் பிறப்பித்தால் போதும். இந்த புதிய வசதிக்கான செயல்விளக்கத்தை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்து காட்டினார். அப்போது அவர் பெண்களுக்கான முடிவெட்டும் சலூனில் ஒருவருக்கு நேரம் ஒதுக்குவது குறித்த உத்தரவை பிறப்பித்தார். உடனே இந்த அசிஸ்டென்ட் செயலி சலூனுக்கு பேசி நேரத்தை பெற்றுக்கொடுத்தது.

கூகுள் அசிஸ்டென்ட் செயலியின் இந்த புதிய வசதியானது, இந்த ஆண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.