Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, May 05, 2018

மழை எனக்கு மருமகன்.........!!!(த.யசுதன்)

Currently online
என் மண்மகளைக் காண 
எத்தனை ஆவல் உனக்கு
வேகமாக ஓடி 
மேகமென மாறிடுவாய்!!!

நீல வானின் ஆடை அவிழ்த்து
கறுப்பாடை அணிவிப்பாய்
மின்னல் கீற்றை மண்ணில்
ஊற்றுவாய்!!!


காற்றுத்தாய் கலைத்தாலும் 
பாடிய படியே தேடி வருவாய்
வரண்டு போன மண்ணவளின் 
மானம் காக்க!!!

காற்றோ என் மகளின் ஆடை தீண்டி
காய வைத்தது
ஆதவனோ சொல்லாமல் வந்த
செல்ல மகளின் கற்பை உறிஞ்சியது!!!

மலட்டு மண்ணென்று 
மானிடனும் உரைத்து உதைத்தான்
அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாய் 
ஒரு துளி முத்தத்தால்!!!

எத்தனை செய்தாலும்
ஏற்க மறுத்தாள் என் மகள்;
மண்ணில் மையம் கொண்ட
மறுகணமே காளான் குடையை
எதிரியாக்கினாள் உனக்கு!!!

அடிக்கடி வராததால் 
வானோடு சேர்த்து வைத்து
பழி உரைப்பாள்
மேலிருந்து கீழ்வரும் உன்னைக்காண 
ஒரு முறையேனும்
மேல் வந்திருப்பாளா..?

மகள் மானம் காத்த மருமகனே
உனக்கு சீதனமாய் எது வேண்டும்...???



நன்றி 
(த.யசுதன்.)
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.