Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, May 09, 2018

இத்தனை சுகமா...........!!! வன்னியூர் மகள்

Currently online
ஆகா இத்தனை மகிழ்வும்
எத்தனை இன்பம்
பூமியில் நானின்று
பூத்த புதுப்பூவாய்
புன்னகை ஏந்தி
ஆனந்தக்கடலிலே
பெண்களின் மன்னன்
மாயவன் அடியில்
புத்தம் புதுமலராய்
இருப்பதாய் உணர்வு

உன் குரல் ஒலி செவியில்
சுருதியும் சேர்ந்தே
சுகராகங்கள் மீட்டுதே
என்னைத் தொலைத்த
உன்காலடி தேடி
என் கால்களிரண்டும்
வலம் வரத்துடிக்குதே

சுமைகளை எல்லாம்
உன் இமைகளில் புதைத்து
எனை அணைத்திடும் தருணம்
நெருங்கிடும் நேரம்
நினைத்ததும் என்னுடல்
அரும்பிடும் முகையாய்
சிலிர்த்தே போனது

அலைபேசி அங்கே
அழைத்தது எனக்காய்
சலித்தே சென்று
தூக்கிய எனக்கு
அதிர்ச்சி இன்பம்
காத்தே இருந்தது
பிரிவின் துயரில்
வாடிய எனக்கு
வானில் பறந்தே
பேரின்பம் அங்கே

எதிர்முனை என்னவன்
மௌனமாய் இருந்தது
ஆயிரம் அர்த்தங்கள்
எனக்குள் மலர்ந்தன
ஆண்டுகள் கடந்து
தொலைந்த நம் காதல்
மீண்டும் அங்கே
தென்றல் காற்றில் மிதந்தது

முடியவில்லை உன்னைப்பிரிய
மன்னித்தென்னை மறுமுறை ஏற்பாய்
ஆண்டவன்வரமாய் ஒலித்தது அவன்குரல்
உயிரே மீண்டும் எனக்குள் வந்ததாய்
உணர்ந்தே நானும் துள்ளினேன் ஒருமுறை
பூமித்தாயெனை தாங்கியவேளை
எல்லாம் கனவென ஏங்கித்துடித்தேன்

நிஜத்தில் ஒருமுறை
நிகழ்ந்தால் போதுமே
பாவியிவள் மனம்
பதறியே போனது
நாளை மலர்கையில்
நீயும் மலர்ந்திடு
ஒருமுறை என்னை
அழைத்திடுவாயோ?????
உன் காதல் நானென
கூறிடுவாயோ????

          நன்றி 
வன்னியூர் மகள்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.