Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, May 07, 2018

அவனை பார்த்தேன்...........!! ஆகிஷா.S

Currently online
எதேச்சையாய் நான் இப்போதுதான் பார்த்தேன்

ஆம் அவன்தான் அவனேய்தான்..

அந்த கோயிலில் அமர்ந்திருந்தான் 
மறைவிலிருந்துதான் கவனித்தேன்

சிதறவிடப்பட்ட அவனது புன்னகை சிரிப்புகளில் பள்ளமான அவன் கன்னங்கள்
இன்னும் பொய்மை கலக்காத அவனின் அதேய் கண்கள்

என்ன அதில் மாறாத மறைந்த சோகம்
எனக்கு மட்டுமே தெரிந்தபடி

பக்கத்தில் அர்ச்சனை தட்டுடன் மஞ்சள் சிவப்பு சேலையில் மார்பின் நடுவே தாலி நெற்றி வகிட்டில் குங்குமத்துடன் மாநிறமான அவன் மனைவி..
அவனுக்கு ஏற்றவளாகவே இருந்தாள்..

மனதில் சந்தேகம்..
குழந்தை..

அட இப்போதுதான் உற்றுபார்கிறேன்
எழுந்த அவளின் வயிற்றில் ஒரு மேடிடல்..

திடிரென இதயத்தில் இனம் புரியாத சந்தோசம் இடையில் சுளீர் என்று ஒரு வலியும்தான் சேர்ந்தே வந்திருந்தது.

தமக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவள் அவனுக்கு வீபூதி வைத்து விட்டாள்.

எனக்கும் பழைய ஞாபகங்கள் 
கணவன் மனைவி என நினைத்து நாங்கள் அன்று நடத்தி முடித்த நாடகத்தில் இந்த கட்டங்கள் கண்முன்னே தோன்றி மறைந்தது.

அவன் இப்போது அவளின் கைகளை பிடித்து நடந்து போகிறான்.

அவனை ஓடிச்சென்று இடைமறிக்க வேண்டுமென கால்கள் கதறுகிறது.

ஆனால்...

அது எப்படி முடியும். இந்த அபாக்கியசாலியை கண்டால் அவனின் இப்போதைய அத்தனை சந்தோஷமும் காணமல் அல்லவா போய்விடும்.

அவனின் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிவிட்டு அடக்கிய கண்ணீரை துடைத்து கொள்கிறேன்..

என் வெள்ளை புடவையால்...

  நன்றி 
ஆகிஷா.S
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.