Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, May 09, 2018

நிலவுக்காதலி..............!!! ஆகிஷா.S

Currently online
அவள் என்றால் எனக்கு சிறுவயது முதலே 
ஒரு இனம்புரியாத ஈர்ப்பு
இருட்டிய பிறகு அவளை காணும் போது ஏனோ 
மனதுக்குள் ஒரு பட்டாம்பூச்சி 
ஓடித்திரிவது உண்மைதான்

எப்போதும் கறுப்பு உடையிலேயே ஜொலிக்கும் 
அவள் ஒரு கட்டழகு தேவதைதான் எனக்கு..

காரணம் தெரியாது கனவுகளில் கூட 
சஞ்சரிக்கும் அவளை பார்த்து 
தினம் தினம் வழியும் நான் 
அன்றுதான் கவனித்தேன்

ஆம்

அவளின் அந்த பால்முகத்தில் சில 
பருக்களும் தழும்புகளும் படிந்து போய் இருந்தது 
ஆனாலும் அதையும் நான் ரசிக்க தவறவில்லை.

அவளை சுற்றி ஆயிரம் பேர் அருகிலிருந்து 
கண்ணடித்து அவளை திசை திருப்ப முயன்றாலும் 
அவள் என்னை மட்டுமே எப்போதும் பார்த்து கொண்டிருப்பாள்.
இப்படி அவளின் பார்வையால் நான் 
சிலவேளைகளில் வெட்கப்பட்டதும் உண்டு.

மாதத்தில் ஒரு நாள் அவள் எனை 
பார்க்க வரமாட்டாள் அவளும் பெண் தானே 
மாதந்தோறும் பெண்களுக்கு வரும் பிரச்சினை 
அவளுக்கும் வந்ததாக்கும் என்று என்னை தேற்றி கொள்வேன்.

எனை சேராமல் அவள் தேய்ந்து கொண்டேய் செல்கிறாள். 
அவளோடு நானும் தான். ஆனால் அவள் அப்பன் தான் 
இதை புரிந்த பாடில்லை.

என்னுடைய தனிமைகளையும் தாபங்களையும் அறிந்தும் 
அவள் எனக்கு எப்போதும் 
எட்டாக்கனியாகவே இருக்கிறாள்

அவளை ஏணி போட்டாவது 
அடைந்து விடுவேன் எனும் உறுதியோடு நானும்
காதலித்து கொண்டு தான் இருக்கிறேன்.

வானில் என் நிலவுக் காதலியை...

   நன்றி 
ஆகிஷா.S
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.