Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, June 10, 2018

பாதாளக்குழுவுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு;02பேர் பலி!

Currently online
கண்டி  வத்தேகம பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கும் பாதாளக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பாதாளக்குழு உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ரணால, அத்துருகிரிய, ஹோமாகம ஆகிய பகுதிகளில் கப்பப் பணத்தை சேகரிக்கும் நடவடிக்கைகளில் சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, நேற்று(சனிக்கிழமை) சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வத்தேகம தெல்தெனிய வீதியின் மடவள பகுதியில் அவசர வீதித்தடை ஏற்படுத்தப்பட்டது.

இதன்போது சொகுசுக்காரொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அதிலிருந்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது காயமடைந்த சந்தேக நபர்கள் இருவரும் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் மனுஷ் மற்றும் அங்கொட லொக்கா எனும் பாதாளக்குழு தலைவர்களின் உதவியாளர்களாக இருந்தவர்கள் எனவும்  உயிரிழந்த ஒருவர் பய்லா எனும் ருமல்ஷ இரேஷ் மதுஷங்க நவகமுவ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.