Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, June 10, 2018

கண்ணிவெடிகளை அகற்ற அவுஸ்திரேலியா 07 மில்லியன் நிதியுதவி!

Currently online
இலங்கையிலுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் செயற்பாடுகளுக்கு 07 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க அவுஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அதிகளவிலான நிதியை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளதுடன், 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 02 பில்லியன் ரூபாவை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தற்போது வழங்கவுள்ள 07 மில்லியன் நிதியினூடாக வடக்கின் மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு புதிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இதனூடாக பெரும்பாலான குடும்பங்கள் தமது காணிகளில் மீளவும் குடியேற முடியும் எனவும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.