Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, June 14, 2018

இடியுடன் கூடிய மழை ; உத்தரப்பிரதேசத்தில் 10 பேர் பலி 28 பேர் படுகாயம் !!

Currently online
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய பலத்த மழையினால் 10 பேர் உயிரிழந்ததுள்ளதுடன் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

கர்நாடகம், கேரளா மற்றும் தமிழத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. முன்னதாக, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் புழுதி புயல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என லக்னோ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டிருந்தது.

நேற்று சீதாபூர் பகுதியில் பெய்த கனமழையினால் இடி தாக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் கொன்டா பகுதியில் 3 பேரும், ஃபைசாபாத்தில் ஒருவரும் இடி தாக்கி உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.