Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, June 10, 2018

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்!!!(10.06.2018)

Currently online
மேஷம்: 
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மன இறுக்கங்கள் உருவாகும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.   

ரிஷபம்: 
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.   

மிதுனம்: 
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். இனிமையான நாள். 

கடகம்: 
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

சிம்மம்: 
கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் நீங்கும் நாள். 

கன்னி: 
சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப் பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.  

துலாம்: 
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.  

விருச்சிகம்: 
பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 

தனுசு: 
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் பக்க வீட்டாரின் ஆதரவு பெருகும். வேற்று மதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.   

மகரம்: 
பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 

கும்பம்: 
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.    

மீனம்: 
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமை கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.