Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, June 13, 2018

படகுகள் மோதி விபத்து ; ரஷ்யாவில் 10 பேர் உயிரிழப்பு !!!

Currently online
ரஷ்யாவில் உலக கால்பந்து போட்டி நடக்க உள்ள நகரில் படகுகள் மோதலில் 10 பேர் உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவில் உலக கால்பந்து போட்டி நடைபெறுகிற நகரங்களில் ஒன்று வோல்காகிரேட். இந்த நகரத்தில்தான் இங்கிலாந்து, துனிசியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, சவுதி அரேபியா, எகிப்து, ஜப்பான், போலந்து நாடுகள் பங்கேற்கிற முதல் சுற்று போட்டிகள் நடக்க உள்ளன.

அங்கு உள்ள வோல்கா ஆற்றில் நேற்று முன்தினம் இரவு 16 பேருடன் பயணித்த உல்லாச படகு, மற்றொரு இழுவை படகுடன் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

எனினும் 5 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். 10 பேர் பிணங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் என்ன ஆனார் என தெரியவில்லை. 

மீட்கப்பட்டவர்களில் 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ரஷ்ய நாட்டினர் என தெரியவந்துள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.