Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, June 13, 2018

பிரஸர் குக்கரில் கடத்தப்படவிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் !!

Currently online
ரூ.10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நோட்டுகளை டுபாய்க்கு குக்கரில் கடத்திச் செல்ல முயன்ற நபர் கேரளா கொச்சி விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லியிலிருந்து விமானத்தில் கொச்சி வழியாக டுபாய் செல்ல முயன்ற நபர் தன்னுடன் ரூ.10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தையும் கொண்டு செல்ல முயன்றுள்ளார்.

ஆப்கன் நாட்டைச் சேர்ந்த இவர் இன்று அதிகாலை டுபாய்க்கு விமானத்தில் பறக்க முயன்றபோது அவரது உடைமைகள் சோதனையிடப்பட்டன. அப்போது சவுதி அரேபியாவின் ரியால்களும் அமெரிக்க டொலர்களையும், பிரஸர் குக்கர் மற்றும் ஸ்டவ் பாத்திரங்களில் அவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபர் மறைத்து வைத்திருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் எப்படி இவ்வளவு வெளிநாட்டுப் பணம் வந்தது. அதை எதற்காக டுபாய் எடுத்துச் செல்கிறார் போன்ற விவரங்களை அறிய அவரிடம் சுங்க அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.