Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, June 10, 2018

ஜூன்11 வரை பலத்த காற்றுடன் கூடிய காலநிலை காணப்படும்!

Currently online
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை ஜூன் 11 வரை தொடர்ந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(10.06.2018) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன்11 இன் பின்னர் இந் நிலைமை படிப்படியாக குறையுமெனவும் குறிப்பிட்டுள்ளதுடன் நாடு முழுவதும் குறிப்பாக மேல், தென், மத்திய, வட, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப் போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும். எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.