Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, June 14, 2018

வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று இரவு 15 பேர் கைது !!

Currently online
குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று இரவு 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றினை அடுத்து இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைக்கலப்பாக மாறியது. அதன் போது இரு குழுக்களையும் சேர்ந்த 15 பேர் காயமடைந்த நிலையில் ஊரணி, மந்திகை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை பொலிஸார் சந்தேகத்தில் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆறு பேரை கைது செய்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள். 

இதன்போது குறித்த ஆறு பேரையும் எதிர்வரும் 21 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று இரவு 15 பேரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.