Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, June 11, 2018

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' ரிலீஸ் திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு !!

Currently online
நடிகர் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் சென்சார் பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளின் டிரைலர்களை ஸ்ருதிஹாசன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அமீர்கான் ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி வெள்ளியன்று வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த விடுமுறையை கணக்கில் கொண்டு இந்த படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் நடித்து, இயக்கி தயாரித்துள்ள இந்த படத்தில் பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ்,உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையில் உருவான இந்த படம் 'தூங்காவனம்' படத்தை அடுத்து இரண்டரை ஆண்டுக்கு பின்னர் வெளிவரும் கமல் படம் என்பது குறிப்பிடத்தக்கது
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.