Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, June 08, 2018

பிக்பாஸ் 2 ; மீண்டும் வாய்ப்பு கேட்கும் அனுயா !!

Currently online
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இதனையடுத்து, இந்நிகழ்ச்சியின் இரண்டாவாது சீசீசனையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியின் டீஸரினை கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து அண்மையில் அதன் புரமோவும் வெளியானது.  இதன் டீஸர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, இதன் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று பல வதந்திகள் பரவி வருகிறது.

இதையடுத்து, பிக்பாஸ் 2- வின் முதல் போட்டியாளராக காமடி நடிகர் 'பவர் ஸ்டார்'' தேர்வு செய்யப்பட்டதையடுத்து, பல பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 

இதையடுத்து, ஜூன் 17ஆம் திகதி, இந்நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில், முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை அனுயா ஒரு பேட்டியில், பிக்பாஸ் வீட்டிற்குள் போக எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.