Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, June 12, 2018

மண்ணெண்ணெய் விலையை 31 ரூபாவால் குறைக்க தீர்மானம் !!

Currently online
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா, இன்று (12) நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இவ் விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை இன்று அமைச்சரவைக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 31 ரூபாவால் குறைக்கப்படுகிறது. 

மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சாவுக்கும் இடையில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மீனவ சங்கங்களும் இதற்கு உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.