Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, June 13, 2018

ரூ.5 லட்சம் பெறுமதியான தங்கத்தை உள்ளாடைக்குள் கடத்தி சென்ற இளைஞன் !!

Currently online
திருச்சி விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் தனது உள்ளாடையில் ரூ.4.63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்துள்ளார். 

நேற்றிரவு துபாயிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் சென்று இறங்கியது. அதிலிருந்து வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை அதிகாரிகள் வழக்கமான அடிப்படையில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, குறிப்பிட்ட ஒரு இளைஞர் மீது சந்தேகம் ஏற்படவும் அவரை தனி அறைக்கு அழைத்து நவீன ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்தனர். 

அப்போது அந்த இளைஞர் தனது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அது ரூ.4.63 லட்சம் மதிப்புள்ள 149 கிராம் தங்கம் என கூறப்படுகிறது. அவற்றினை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, இளைஞரின் பெயர் ரகுமான் என்பதும், அவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 

எனினும் இந்த தங்கம் கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எங்கிருந்து யாருக்காக தங்கத்தை கடத்தி செல்லப்படுகிறது என்பன குறித்து தொடர் விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.