Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, June 13, 2018

ரூ.60 லட்சம் பெறுமதியான காரில் தந்தையின் உடலை அடக்கம் செய்த மகன் !!

Currently online
மகன் ஒருவர் தந்து தந்தை மீதுள்ள அளவு கடந்த பாசத்தால், அவர் இறந்தபின் சவப்பெட்டியில் வைப்பதற்கு பதிலாக, புதிதாக ரூ.60 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யு காரில் அவரது உடலை வைத்து  அடக்கம் செய்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், தலைநகர் அபுஜா அருகே, இகிலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசுபுக்கி. இவர் சிறுவயதில் இருந்தே, தனது தந்தைக்கு விலை உயர்ந்த கார் வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், அது நிறைவேற்றக் காலம் இசைந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் அசுபுக்கியின் தந்தை திடீரென மரணமடைந்துவிட்டார். தந்தையின் மறைவை எண்ணி மகன் அசுபுக்கி மிகுந்த வேதனை அடைந்தார். 

தன்னுடைய பாசமான தந்தைக்கு விலைமதிப்புள்ள காரை பரிசளிக்க முடியவில்லை என கண்ணீர்விட்டார்.

பின்னர் தனது தந்தையை சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்வதற்கு பதிலாக  ரூ.60 லட்சத்தில் பிஎம்டபிள்யு கார் ஒன்றை விலைக்கு வாங்கி அதில் அவரின் உடலை வைத்து அடக்கம் செய்துள்ளார். 

.இந்த காட்சி குறித்த புகைப்படம் சமூகஊடகங்களில் வைரலாகியுள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.