Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, June 10, 2018

தமிழ் என் உயிர் என்பேன்.........!!!!!(முனைக்காடான் குபேந்திரன்)

Currently online
வலியுடை மருந்தும்
தமிழதின் சுவையும்
மனதினில் புகுந்திட
இறப்பினை விரட்டும்...!!!

தமிழ் அறம் போற்றி
உயர்ந்திட்ட வாழ்வும்
பண்பினால் உயர்ந்து
உனை வணங்கிட்ட போதும்...!!!

உணர்வினில் உரமாய்
உரிமையின் குரலாய்
புரட்சிகள் செய்திட
புகழ்ச்சியை அழித்திடு தமிழே.!!!

மறத்தமிழ் வீரம்
மனதுக்குள் வேண்டும் _ உனை
மறந்திடும் இதயம்
உயிர் துறந்திட வேண்டும்...!!!

அடிமையின் இருளை
அழித்திட சிணம் தா
அகவைக்குள் உன்னை
வணங்கியே தீர்வேன்..!!!

நஞ்சினை உண்ட 
ஈசனின் புகழும்
தமிழினைத் சுவைத்த 
தமிழனின் உளமும்
ஒன்றெனக் கொள்வேன்...!!!

லட்சம் வரிதனில் _ உனை
எழுதிடத் தீராத பெருமை
உச்சம் தொட நினைத்தே
அச்சமும் தீர்ந்தது என் மனமே...!!!

நித்திய வாழ்வினில்
வசந்தம் சுகமே _ என்
சஞ்சல வாழ்வின் _ உன்
சரணம் ஜெயமே...!!!

ஆசை உலகினில் 
கர்வம் வேண்டாம் _ எந்தன்
குறுகிய வாழ்வினில் 
உன் புகழ் வேண்டும்....!!!

என் உயிராய் வேண்டும் தமிழே வாழி!!!


நன்றி 
(முனைக்காடான் குபேந்திரன்)
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.