Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

ஊவா மாகாண வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக நிலையம் திறப்பு!

Currently online
ஊவா மாகாண வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களால் நேற்று(08.06.2018)  திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக நிலையம் ரூபா 540 மில்லியன் செலவில் பதுளை மாவட்டத்தின் ஹாலி எல பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்து மாடிகளுடன் சகல வசதிகளையும் கொண்டதாக   நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.

இதில் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக பணியாளர்களைப் பயிற்றுவித்தல், நலன்புரி சேவைகளைப் பெற்றுக்கொடுத்தல், வெளிநாட்டுப் பணியாளர்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி நாட்டிற்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத் தரும் வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு நலன்புரி சேவைகளை வழங்குவதும் சிறந்த மனநிலையுடன் அவர்கள் பணிபுரிவதற்கு தேவையான சூழலை உருவாக்கிக் கொடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனெவி ரத்ன, பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஊவா மாகாண ஆளுநர் ஆரிய பீ. ரெக்கவ, முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் கே.ஓ.டீ.டீ. பெர்னாண்டோ உள்ளிட்ட அதிகாரிகள் பங்குபற்றி இருந்தனர்.

இதன்போது வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கும் மனக்குறைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த சகல நிறுவனங்களும் தமது கடமைகளை புரிந்துணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் நிறைவேற்றவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி  சுட்டிக்காட்டினார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.