Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, June 10, 2018

அதுவொரு கனாக்காலம்............!!!!(வன்னியூர் சுகிர்)

Currently online
Image result for WEDDING thali in keralaஅம்மாவின் இடையில்
அசையாமலிருந்தேன்;
எனக்கு சாதம் ஊட்டுதற்கு
சத்தம் போட்டு அழைத்து...
அறிமுகமான நிலவே...!!!

அன்றிலிருந்து நீயும்..
ஆவலாய் தேடிய நானும்.
காலமும் வெகுவாக நகர 
கனவுகள் ஆயிரம் சுமக்க....!!!

தாயின் பாசம் உணர்ந்தேன்
அவளுக்காய் வாழத் தொடங்கினேன்...!!!
வயது வந்ததும் வரன் பார்த்தாள் தாய்
அரண் செழிக்க வேண்டுமாம்
மழலைகள் யொலிக்க வேண்டுமாம்..!

தனக்கென இருப்பது போகட்டும்
உனக்கொரு துணை வேண்டுமாம்...!!!
என் கடமை முடிவுற்றதும் - மகனே
இவள் கிடைப்பாள் மீட்டெடுக்க 
உலகறிய உனக்கிவள் தாரம்..
உன் மனதறியும் மறு அவதாரம்..!!!

தாயின் அறிமுகமே - என்னைத்
தழுவிய தலைவியே...!!!
தாயைப்போல பார்ப்பதற்கு
தவமின்றிக் கிடைத்த வரமே..
என் துணையே...!

நிலாப்பாட்டு பாடுதற்கு,
நீயும் நானும் இணையணும்....
பேரப்பிள்ளை பெற்றுக்கொடுக்கணும்.!
என் தாயின் எதிர்பார்ப்பு - நம்
தலைமுறை கூறும் வரலாறு..!

அவளும் நானும் அடைக்கலமானோம்
முதுமை எனும் போர்வைக்குள்லிருந்து
முடிந்தவரை வாழத்துடிக்கிறோம்..!!!

முணுமுணுப்பு பாஷையிலே - காலத்தை
முன்னோக்கிப் பார்க்கிறோம்..!


நன்றி 
(வன்னியூர் சுகிர்)
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.