Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, June 12, 2018

உயிரிழந்த காதலியை திருமணம் செய்த காதலன்!

Currently online
தென் ஆப்பிரிக்காவில் காதலி உயிரிழந்த நிலையில் அவர் சடலத்தை திருமணம் செய்த காதலனின் செயல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 

டர்பன் நகரில் உள்ள ஒசிண்டிஸ்வினி பகுதியை சேர்ந்த ஜபுலனி துலுங்வேன் எனும் நபரும் சிந்தி குமுலோ என்ற பெண்ணும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில் உடல் நலக்குறைவால் குறித்த காதலி இரு தினங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் தாம் உயிராக நேசித்த காதலியின் மரணத்தால் துடித்து போன ஜபுலனி மனதை கல்லாக்கி கொண்டு சடலமாக கிடந்த சிந்தியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தமது சமூக வழக்கப்படி உடைகள் அணிந்த நிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து ஜபுலினி தெரிவித்ததாவது;

நான் சிந்தியை நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என உறுதியளித்திருந்தேன் அதை தற்போது நிறைவேற்றியுள்ளேன். அவர் இறந்துவிட்டாலும் என் மனதில் எப்போதும் வாழ்வார் என உருக்கமாக கூறியுள்ளதுடன், தன் காதலியை திருமணம் செய்த பின்னர் அவரின் சடலத்தை தன் கையால் ஜபுலினி புதைத்திருந்தமை அனைவரையும் நெகிழவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.