Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

முற்றிலும் உள்நாட்டு வடிவமைபில் ‘தனுஷ்’ பீரங்கி!

Currently online
முதல் முறையாக முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள பீரங்கி மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 155 எம்எம் ரகத்தை சேர்ந்த இந்த பீரங்கி, 38 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கி அழிக்கும். இது போபர்ஸ் பீரங்கி தாக்கும் தூரத்தை விட 11 கி.மீ. அதிகம் ஆகும். ‘உள்நாட்டு போபர்ஸ்’ என்றும் ‘தனுஷ்’ அழைக்கப்படும் குறித்த பீரங்கி நீண்ட தொலைவில் உள்ள இலக்கை குறிபார்த்து சுடவல்லது. 

அத்துடன் குளிர் பிரதேசமான சிக்கிம், லே வெயில் பிரதேசமான ஒடிசா மாநிலத்தின் பலசோர் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டதுடன் பாலைவன பிரதேசமான பொக்ரானில் இறுதியாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதுவும் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து தனுஷ் பீரங்கியை இந்திய ராணுவத்தில் சேர்க்க வழி பிறந்துள்ளது. இந்த ஆண்டில் 12 தனுஷ் பீரங்கிகள் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.