Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, June 14, 2018

அப்பாதான் என் முதல் அம்மா.............!!!! வன்னியூர் கிறுக்கன்

Currently online
அப்பா கடவுளுக்கும் மேலான
ஆபூர்வ சக்தியின் வெளிப்பாடு 
கறுக்கப்பட்ட பெரும் வெளியில் சிதைக்கப்பட்ட போதும் 
சீர்படுத்திய சிகரத்தின் மகுடம்.

நான் கருவுற்ற நாள் தொடங்கி 
கையில் தூக்கும் நாள்வரையில் கருவறையின் மேலுருவில் 
அன்புக் காவல்கொண்ட 
காவிய சுவடின் காதலன்.

கொட்டும் மழையிலும் 
வீசும் பனியிலும் 
வாட்டும் ஒளியிலும் 
தேகம் கறுக்க நோயும் பிடிக்க 
தோலும் சுருங்கி குரலுமடைத்து-

சுமையானபோதும் 
எனை மார்பில் அணைக்க 
கரத்தைப் பிடித்து நடையும் பழக்க நிலாவைக் காட்டி சோறும் ஊட்ட 
தோளில் தூக்கி பாடல் பாட-

விழியில் எனை நிறுத்தி 
வலியை உடன்மறந்து 
என்னுடலை வலுவாக்க
அவருடலை மாய்த்தெடுத்து
பாலைவன வெய்யிலிலும்
பால் கொடுத்த என் முதல் அம்மா.

விதம் விதமா ஆடைவாங்கி
திரவியங்கள் உடனெடுத்து
வண்ணக் கூடை ஒன்றினிலே
ஒட்டுத்துணி நிறைவாக்கி-

பஞ்சு மெத்தை ஒன்றெடுத்து
பக்குவமா மடித்து வைத்து 
பட்டினியா கிழிந்தவுடை 
உடுத்திக் கொண்டு 
மூலையில கிடப்பாரே 
என் அப்பா கடவுளுக்கு மேலதான்.

கொஞ்சம் நான் வளர்ந்துவிட
ஒதுக்கி என்ன வைத்ததில்ல 
தோல்வியை பகிர்ந்து கொள்ள
கவலையைக் கூறிவிட 
கண்ணீரைத் துடைத்துவிட-

நான் காலத்தை வென்றுவிட
விதையிட்டு நீரூற்றி 
தோள் தட்டிப் பலப்படுத்தும்
என் முதல் நண்பன் அப்பா தான்.

அப்பா காலத்தில் கடந்து விடும்
கானல் நிழலில்லை 
காவியத்தில் எழுதிவிடும்
கருக்கொண்ட நிஜம்.....

          நன்றி 
வன்னியூர் கிறுக்கன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.