Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, June 10, 2018

திருவொற்றியூரில் இளைஞரை கழுத்தறுத்து கொடூரமாகக் கொலை!

Currently online
சென்னை திருவொற்றியூரில் கழுத்தறுத்து  கொலை செய்து கால்வாயில்  வீசப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

திருவொற்றியூர் ஜீவன்லால்நகர் அருகே அரசு பள்ளி பின்புறம் ரயில்வேக்கு சொந்தமான திறந்த வெளி மழை நீர் கால்வாய் பகுதியிலேயே மீட்டுள்ளனர். இறந்தவர் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த நபர் இறந்து கிடந்த இடத்தின் அருகில் ஒரு கத்தி மற்றும் மதுபான போத்தல்கள் போன்றவற்றை போலீசார் மீட்டுள்ளனர். குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.  
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.