Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, June 12, 2018

கனடாவில் காணாமல் போன ஈழத் தமிழ் இளைஞன் !!

Currently online
ஈழத் தமிழ் இளைஞன் ஒருவர் கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே படகில் இருந்து ஒன்டாரியோ ஏரியில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போனவர் 27 வயதுடைய பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞன் என அவரது உறவினரான காண்டீபன் சுப்பையா தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் கனேடிய நேரப்படி ஞாயிறு இரவு 9.42 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் மிகவும் திறமையான ஒருவர். DJ இசை மூலம் தமிழ் சமூகத்தில் மிகவும் பிரபல்யமடைந்த அவர் ஒரு சிறந்த DJ இசை கலைஞர் எனவும் பார்த்தீபனின் நண்பர்கள் தான் அவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் படகில் இருந்து விழுந்து விட்டதாகவும் தெரிவித்தனர் எனவும் இதனை இலங்கையில் உள்ள சகோதரனுக்கு அறிவித்ததாக இளைஞனின் உறவினரான காண்டீபன் சுப்பையா தெரிவித்துள்ளார்.

கனடா கடலோர காவல்படை இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ரொரொண்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. கடலோர பொலிஸார் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.