Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, June 15, 2018

இந்து சமய விவகார பிரதியமைச்சர் பதவியில் இருந்து காதர் மஸ்தான் இராஜினாமா!

Currently online
இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியில் நியமனம் செய்யப்பட்ட காதர் மஸ்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பை தொடர்ந்து இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் இந்து விவகாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி போன்றவற்றிகான பிரதி அமைச்சராக பதவியேற்றிருந்தார்.

இந்த  நிலையில், இந்து விவகார பிரதி அமைச்சராக அவர் நியமனம் செய்யப்பட்டமைக்கு  எதிராக பல்வேறுபட்ட ஆர்ப்பாட்டங்களும் கண்டனங்களும் வெளிவந்திருந்தது.

எனவே மதங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்கவும், பொது அமைப்புக்களின் வேண்டுகோளிற்கு  அமைவாகவும் தாமாகவே முன்வந்து இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இருப்பினும் மற்றைய அமைச்சுக்களின் பிரதி அமைச்சராக தொடர்ந்து தாம் செயற்பட தீர்மானித்துள்ளதாக காதர் மஸ்தான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.