Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, June 14, 2018

தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்பு!!!

Currently online
வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று   மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நாவற்குடா கிழக்கு, 4 குறுக்கு வீதி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்த, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி விபுலானந்தா இசைநடன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் .

உயிரிழந்த யுவதி காக்காச்சிவட்டை மண்டூர் பாடசாலை வீதியை சேர்ந்த சங்கரத்துரை பானுஜா என்ற 22 வயதுடைய மாணவி என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவி கல்லடி விபுலானந்த இசைநடன கல்லூரியில் கட்புலன் திறன் நுட்ப துறையில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயின்று வருகின்றதாக பொலிசார் தெரிவித்தனர் .

மேலும் இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத டயவியல் பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருவதோடு, மரணம் தொடர்பான பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.