Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

யாழ்.வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடற்றொழில் திணைக்களத்தை முற்றுகை!

Currently online
யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்கள் பண்ணை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தை நேற்று(08.06.2018) காலை 7.30 மணி முதல் முற்றுகையிட்டனர்.

குறித்த முற்றுகைப் போராட்டமானது வௌி மாவட்ட மீனவர்கள் தமது கடற்பரப்பில் அட்டைத் தொழிலில் ஈடுபடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் தாழையடி மீனவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும்  கலந்துகொண்டனர்.

மேலும் இப்போராட்டத்தினால் கடற்றொழில் திணைக்களத்தின் நிர்வாக செயற்பாடுகள் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை  முடக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.