Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, June 10, 2018

கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சி;கவர்னர் பன்வாரிலால் தெரிவிப்பு!

Currently online
செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் பங்கேற்று உரையாற்றும்                                 போதே
கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று  இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் கல்வித்துறையில் நமது மாநிலம் பெற்றுள்ள வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. பள்ளிக்கு செல்லாமல் இடையில் நிற்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 30 முதல் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருக்கிறார்கள். 

மேலும் 45 சதவீத மாணவர்கள் பள்ளி கல்வியை முடித்துவிட்டு மேல் படிப்புகளுக்கு செல்கிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு ஏராளமான மருத்துவ கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே தமிழக அரசு கல்வித்துறையை துடிப்புடன் மேம்படுத்திவருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளை ஊக்குவிப்பதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது எனவும் குறிப்பிட்டிருந்தார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.