Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, June 08, 2018

முடிவறியாப் பயணம்.............!!!!! வன்னியூர் சுகிர்

Currently online
மெல்லச் செல் நதியே
தேகம் சற்று சுட்டெரிக்கிறது
தங்கியிருந்து தவண்டு செல்லாயோ
கரையை மோதி 
நுரைகள் தெளிக்காதே..!

மனம் தான் நொந்து 
மடைகள் உடைக்காதே..!
திறந்து விடுகிறேன் 
திமிருடன் செல்லாதே..!
பாவமாய் இருக்கிறது 
பாறையை மோதாதே..!

குறுக்கே கிடக்கும் 
நடைபாதை மரமதை
புறந்தள்ள எண்ணாதே..!
மூச்சை உள்ளிழுத்து 
மூழ்கி எழுந்து செல்..!

உனக்குள் புலம்புவதை 
எனக்கும் சொல்வாயோ..!
நீ தூங்கும் பொழுதை 
நிஜம் படச்சொல்லிப் போ.!

சட்டென்று கல்லெடுத்து 
சத்தமிட்டு வீசமாட்டேன்
ஈயத்து வலைவீசி 
காயங்கள் தந்திடேன்...!

உடலும் உயிரும் 
உனக்கு வேறல்ல..
நிலையாய் நிற்க கடலாயானாய்
நிலைக்குத்தாக விழவே அருவியானாய்
நில்லாமலோடி ஆறாயானாய்..!

உயிர்கள் வாழ 
பயிர்கள் செழிக்க
முகிலை ஏற்று 
முழக்கம் பரப்பி
மழையாய் பொழிந்தாய்..!

நிலக்கீழ் ஓடியொளிந்து
ஊற்றாய்த் திரிந்தாய்
நிலைமாறா பணியை 
நிறுத்தாமல் செய்தாய்..!

நிலமதைத் துளையிட்டு 
நிலத்தடி ஊற்றைக்குடித்து
நிமிர்ந்தெழும் தொழிற்சாலைகளால் நிர்க்கதியாகி 
நிர்வாணக்கோலம்
நீரின்றி வாழாது உலகு..!

      நன்றி 
வன்னியூர் சுகிர்
 கிளிநொச்சி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.