Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, June 08, 2018

அமெரிக்க - வடகொரிய தலைவர்கள் சந்திப்பிற்க்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் !!

Currently online
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்புக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   

ஒருவர் நாட்டை ஒருவர் அழித்துவிடுவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், வரும் 12-ம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து அணுஆயுத ஒழிப்பு குறித்து பேச ஒப்புக் கொண்டனர். இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் செய்து வருகிறது. 

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் கூறியதாவது:
அதிபர்கள் ட்ரம்ப் - கிம் சந்திப்புக்கான எல்லா ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்தச் சந்திப்பில் நல்லதொரு முடிவு கிட்டும் என்று நம்புகிறோம். அதேநேரத்தில் ஒரே சந்திப்பில் கொரிய தீபகற்பத்தில் நிலவும் எல்லா சிக்கல்களும் அவிழ்ந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்தச் சந்திப்புக்காக நாங்களாக யாரையும் அழைக்கவில்லை. முதலில் அவர்கள்தான் எங்களைத் தொடர்பு கொண்டார்கள். முதலில் அமெரிக்காதான் எங்களைத் தொடர்பு கொண்டது. சிங்கப்பூர்தான் சிறந்த இடம் என்று அமெரிக்காவும் வடகொரியாவும் முடிவு செய்துள்ளன. இதற்காக சிங்கப்பூர் மக்கள் பெருமை கொள்ள வேண்டும்.

நாங்கள் நடுநிலையானவர்கள், நம்பிக்கையானவர்கள், பாதுகாப்பான நாடு என்பதால் சிங்கப்பூரை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். நாங்களும் உலக அமைதிக்காக எங்கள் பங்கை செய்ய தயாராக இருக்கிறோம். அதற்காக ட்ரம்ப் - கிம் சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துள்ளோம். அமெரிக்க அதிகாரிகளுடன் சிங்கப்பூர் அதிகாரிகள் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவ்வாறு சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.