Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

காத்தான்குடி பகுதியில் துப்பாக்கி சூடு;வயோதிபர் பலி!

Currently online
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி ஜந்தில் நேற்றிரவு(08.06.2018) நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பழனி பாவா என்று அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முஹம்மத் இஸ்மாயில் என்பவரே இந்தத் துப்பாகிச் சூட்டில் ஸ்தலத்திலேயே சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார்.

குறித்த வயோதிபர் புதிய காத்தான்குடி ஜந்தில்  கர்பலா வீதி, அலியார் சந்தியிலுள்ள அவரின் ஹோட்டலில் இருக்கும் போது அங்கு வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் இரவு 11.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் தடயவியல் பரிசோதகர்களான பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் ஸ்தலத்துக்கு விரைந்து கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.