Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, June 11, 2018

போதையில் சண்டை போட்ட கணவர் ; அம்மிக் கல்லைப் போட்டுக் கொலை செய்த மனைவி !!

Currently online
குடிபோதையில் சண்டை போட்ட கணவரின் தொல்லை தாங்க முடியாமல் மனைவி, கணவன் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

திருமுருகன் குடிப்பழக்கம் உடையவர். தினசரி குடிப்பதோடு வேலைக்கும் சரியாக போவதில்லை. வேலைக்கு செல்லாமல், குடித்துவிட்டு, மனைவி சுந்தரியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். 

இந்நிலையில் நேற்று அதிகாலை குடிபோதையில் சுந்தரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சுந்தரி வீட்டிலிருந்த அம்மி கல்லை கணவரின் தலையில் போட்டுள்ளார். தலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காஞ்சிபுரம் தாலுகா பொலிசார், சுந்தரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.