Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, June 10, 2018

பெரியகல்லாறு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Currently online
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பெரிய கல்லாறு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பெருங்குற்றப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இரவு வீட்டை விட்டு வெளியேறிய குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடியத்தை அடுத்து இன்று(10.06.2018) காலை மலசல கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் பெரிய கல்லாறு பிரதான வீதி கொம்பச் சந்தியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான இராசதுரை துவேந்திரன்(48) என்னும் 04 பிள்ளைகளின் தந்தையாவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொள்ளவுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.