Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

சொல்லிவிடு நாயகனே.......!!!!!(கவிப்பிரியை சுஜனி)

Currently online
சொல்லிவிடு என்னவனே
சொல்லில் அடங்கா உன்
சொற்பத காதலதை..!!!

சொக்கித் தவிக்கின்றேன்
சோகத்தின்- பேச்சினிலே
சுவாசிக்க நினைக்கின்றேன்....!!!

நீ விடும் மூச்சினிலே
தேக்கி வைத்த ஆசையை
சொல்லிடவே நினைக்கின்றேன்...!!!

ஆத்மராத்ம அன்பில் உறைந்திடவே
உறைவிடம் தருவாயா...!!!

ஊடல் கொண்டே
உன் உயிருக்குள் கலந்திடவே உன்னத
உன் உறவை தேடுகின்றேன்...!!!

உன்தேகத்திலே
பனியாகி உறைகிறேன்...!!!

பூவாக மாறி போர்க்களம் தொடுப்பாயா
போர்களத்திலே கண்ணகியாக
கரம் சேர்ந்திடவே
காத்திருக்கின்றேன் கண்ணாளனே...!!!

என் முன்னாள் நீ வரவே
வழி மீது விழி வைத்து
வலியோடு காத்திருக்கின்றேன்...!!!

என் கனவுகளை கலைந்திடாது கண்ணீரில்
வேகும் காதலை கரைசேர்த்திடு என்
காதலனே.....!!!

துடுப்பில்லா படகு போல் திசைமாறி
செல்கின்றேன்
தீயாகி வா நாயகனே.....!!!

தித்திக்கும் தமிழால் பிரியமுடன் எழுதுகின்றேன்.
சொல்லிவிடு நாயகனே.....!!!!



நன்றி
(கவிப்பிரியை சுஜனி)
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.